சென்னையில் இன்று பெய்த கனமழையால் பல்வேறு இடங்கள் வெள்ளக்காடாக மாறியது. மேலும் தொடர்ந்து பெய்த மழையால் வாகன போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. இதனால் சென்னை மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதையடுத்து தற்போது கொரோனா குறித்த வேதனையான செய்தி வெளியாகியுள்ளது.
அது என்னவென்றால், மீண்டும் சென்னையில் கொரோனா தொற்று இரு மடங்கு அதிகரிக்க தொடங்கி விட்டது. இன்று மட்டும் 397 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். புத்தாண்டு, பொங்கல் பண்டிகை வர உள்ள நிலையில், கொரோனா அதிகரிப்பு மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.