Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐசிசி விருது 2021: சிறந்த டி20 வீராங்கனைக்கான விருது ….! ஸ்மிருதி மந்தனா பெயர் பரிந்துரை ….!!!

இந்த ஆண்டுக்கான சிறந்த டி20 வீராங்கனைகளுக்கான பரிந்துரைப் பட்டியலை ஐசிசி  வெளியிட்டுள்ளது .

ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் ஐசிசி டெஸ்ட் ,டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்து விருது வழங்கி கவுரவித்து வருகிறது .அதன்படி  2021-ஆம் ஆண்டுக்கான சிறந்த டி20 வீராங்கனைகளுக்கான பரிந்துரை பட்டியலை ஐசிசி அறிவித்துள்ளது. இதில் இந்திய மகளிர் அணியில் ஸ்மிருதி மந்தனா , இங்கிலாந்து அணியில்  நட் ஸ்கைவர், டாமி பியூமண்ட், அயர்லாந்து வீராங்கனை கேபி லூயிஸ்  ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா இந்த ஆண்டு 9 டி20 போட்டிகளில்  விளையாடி 2 அரைசதம் உட்பட 255 ரன்கள் குவித்துள்ளார் .இதேபோல் அயர்லாந்து வீராங்கனை கேபி லூயிஸ் இந்த ஆண்டில் ஒரு சதம் , ஒரு அரை சதம் உட்பட 325 ரன்கள் குவித்துள்ளார். அதேபோல் இங்கிலாந்து அணியில்  டாமி பியூமண்ட் 303 ரன்களும் ,நாட் ஸ்கைவர் 153 ரன்கள் மற்றும் 10 விக்கெட் கைப்பற்றினார் .

Categories

Tech |