Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பில் மாற்றம்…. முதல்வர் இன்று ஆலோசனை…. வெளியான முக்கிய தகவல்…!!!

கொரோனா ஊரடங்கு விரைவில் முடிவடைய உள்ளதால் மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கலாமா அல்லது புதிய கட்டுப்பாடுகளை விதிக்கலாமா? என்று முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்று தற்போது பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனால் தொடர்ந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். தற்போது  உருமாற்றம் கண்டு OMICRON உலக நாடுகள் முழுவதும் பரவி வருகின்றது. தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு முடிவடைய இருப்பதால் ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாக முதல்வர் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பள்ளிகளை தொடர்ந்து இல்லாமல் சுழற்சி முறையில் நடத்துவது குறித்து ஆலோசிப்பார் என சொல்லப்படுகிறது.

கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் திடீரென்று தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் பங்கு கொள்வார் என்று கூறப்படுகின்றது.

Categories

Tech |