ரிஷப ராசி அன்பர்களே….!! இன்றைய நாள் திட்டமிட்ட பணி எளிதாக இன்று நிறைவேறும். இதனால் மனதில் புத்துணர்வும் நம்பிக்கையும் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் கூடுதல் மூலதனம் செய்வீர்கள். நிலுவைப்பணம் வசூலாகும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை கொடுக்கும். பொருள் வரவு இன்று நல்லபடியாகவே இருக்கும்.நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியங்களும் நன்றாகவே முடியும்.
அது மட்டுமில்லாமல் குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். மனமும் அமைதியாக காணப்படும். முடிந்தால் இன்று ஆலயம் சென்று வாருங்கள். மனம் மேலும் அமைதியாக இருக்கும். அதுபோலவே கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் இன்றைக்கு நீங்கள் ரொம்ப கவனமாக நடந்து கொள்ள வேண்டும். முக்கியமாக பணம் பரிவர்த்தனையின் போதும் அதாவது, மற்றவர்களிடம் பணம் நீங்கள் வாங்குவதாக இருந்தாலும் சரி, கொடுப்பதாக இருந்தாலும் சரி கொஞ்சம் கவனமாகவே செயல்படுங்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே இன்று நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு
அதிஷ்ட எண் : 6 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்