ஆஸ்திரேலியர் ஒருவருக்கு இஸ்ரேல் நீதிமன்றம் 8,000 ஆண்டுகள் பயணத்தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த Noam Huppert ( வயது 44 ) என்பவர் இங்கிலாந்தை சேர்ந்த தனது முன்னாள் மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்க தவறியுள்ளார். இதனால் அந்த பெண் நியாயம் கேட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளார். அங்கு அவர்களுடைய குழந்தைகள் இருவருக்கும் 18 வயது பூர்த்தியாகும் வரை Noam Huppert மாதம் தலா 1,200 பவுண்டுகள் வழங்க வேண்டும் என்று 2013-ஆம் ஆண்டில் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.
மேலும் கடந்த 2011-ல் நோம் ஹப்பர்ட்டின் முன்னாள் மனைவி மூன்று மாதம் மற்றும் 5 மாத குழந்தையுடன் இஸ்ரேலுக்கு திரும்பினார். அதனைத் தொடர்ந்து நோம் ஹப்பர்ட் 2012-ல் குடும்பத்தினருடன் சேர்ந்து வாழவேண்டும் என்ற எண்ணத்தில் இஸ்ரேலுக்கு சென்றுள்ளார். ஆனால் நோம் ஹப்பர்ட்டால் அதன் பிறகு ஆஸ்திரேலியாவுக்கு திரும்பி செல்ல முடியவில்லை. ஏனென்றால் இஸ்ரேல் நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் படி குழந்தைகளுக்கான பாதுகாப்பு தொகையைச் ( மொத்தமாக 1.8 மில்லியன் ) செலுத்தும் வரை நோம் ஹப்பர்ட்டின் இந்த பயண தடையானது 8,000 ஆண்டுகள் நீடிக்கும் என்றே கூறப்படுகிறது.
ஆனால் குழந்தைகளுக்கான பாதுகாப்பு தொகையை மொத்தமாக செலுத்தி விட்டால் இந்த பயணத் தடை நீக்கப்படுமா ? என்ற கேள்விக்கு தெளிவான பதில் எதுவும் இல்லை. இந்த நிலையில் வெளிநாட்டவர்கள் பலரும் இஸ்ரேல் நீதிமன்றத்தின் இந்த கடுமையான நடவடிக்கையால் நாட்டை விட்டு வெளியேற முடியாமல் சிக்கித் தவித்து வருவதாக நோம் ஹப்பர்ட் கூறியுள்ளார்.