பொங்கல் பரிசு பெறுவதற்கான டோக்கன்கள் நேற்று முதல் வழங்கப்பட்டு வருகின்றது
தமிழகத்தில் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் விமர்சையாக கொண்டாடும் வகையில் இருபத்தி ஒரு பொருள்கள் ரேஷன் கடைகள் மூலமாக இலவசமாக வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதன்படி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு மையங்களில் வசிப்போருக்கு 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. ஜனவரி 3 ஆம் தேதி முதல் ரேஷன் கடைகள் மூலமாக இந்த பரிசுப்பொருட்கள் வழங்கப்பட உள்ளன. தெருவாரியாக சுழற்சிமுறையில் நாளொன்றுக்கு 150 முதல் 200 குடும்ப அட்டைதாரர்களுக்கு வினியோகம் செய்யப்படும் என்றும், பொங்கல் பரிசு தொகுப்பு அனைத்து குடும்ப அட்டை வினியோகம் செய்ய வேண்டிய முழுப் பொறுப்பும் தமிழக அரசையே சாரும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனையடுத்து வீடுவீடாக நேற்று முதல் டோக்கன் கொடுக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகின்றது. நேற்று முதல் 3 ஆம் தேதி வரை அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு பெறும் நாள், நேரம் குறிப்பிடப்பட்டு டோக்கன் வினியோகிக்கப்படுகிறது. சென்னையில் 1,300 கடைகள் செயல்பட்டு வருகின்றன. கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று டோக்கன் வினியோகிக்கும் பணியை தொடங்கி உள்ளனர். வருகிற 4ம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகிக்கப்படும். இந்த நாட்களில் வெளியூர் சென்று இருந்தாலும் அவர்கள் வந்த பின்பு பொருட்களை பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.