அமெரிக்கா, தைவான் விவகாரத்தில் தலையிட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று சீனா பகிரங்கமாக எச்சரித்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை அன்று சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ தைவான் விவகாரம் தொடர்பில் பேசியுள்ளார். அப்போது அமெரிக்கா தேவையில்லாமல் தைவானை ஊக்குவித்து அந்நாட்டிற்கு சுதந்திரம் கேட்கும் சக்தியினை வழங்கி வருகிறது. இதன் மூலம் அமெரிக்கா தைவானை அழிவு பாதையில் அழைத்து செல்கிறது என்று அவர் கூறியுள்ளார்.
இதுபோன்ற நடவடிக்கைகள் அமெரிக்காவை தான் மோசமாக பாதிக்கும். எனவே அமெரிக்கா தைவான் விவகாரத்தில் தலையிட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ பகிரங்கமாக எச்சரித்துள்ளார். அதேபோல் தைவான் பிராந்தியம் சீன தாயகத்துடன் இணைவதை தவிர வேறு வழியே இல்லை என்றும் கூறியுள்ளார்.