மிதுன ராசி அன்பர்களே….!!! இன்று நண்பரின் அலட்சியமான பேச்சு வருத்தத்தை கொடுக்கலாம். பொறுமை குணம் பின்பற்றி அவர் சிந்தனையில் நல்ல மாற்றம் உருவாக்குவீர்கள். இன்று தொழில் வியாபாரம் நடைமுறை தாமத கதியில் தான் இயங்கும். பணச் செலவில் கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் பேச்சின் இனிமை புத்திசாலித்தனம் இவற்றால் நல்ல முன்னேற்றம் பிறக்கும்.
சிலருக்கு புதிய ஆர்டர்கள் கிடைக்கும். அது மட்டும் இல்லாமல் ஏற்றுமதி தொழிலை செய்பவர்கள் மற்றும் வெளிநாடுகளில் வேலை செய்பவர்கள் போன்றவர்களுக்கு இன்று சிறப்பான நாளாக இருக்கும். நல்ல முன்னேற்றம் இருக்கும். கணவன் மனைவியைப் பொறுத்தவரை அன்பு இருக்கும். குடும்பத்தில் பிரச்சினை இல்லாமல் சிறப்பான சூழ்நிலை காணப்படும். இன்று புதிய நபர்களையும் நீங்கள் சந்திக்க கூடும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.