Categories
மாநில செய்திகள்

கடந்த 10 வருட ஆட்சியில் எதுவும் செய்யவில்லை…. முதல்வர் ஸ்டாலின் பேச்சு….!!!!

சென்னையில் நேற்று காலை மேகமூட்டம் காணப்பட்ட நிலையில் பிற்பகலில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். மேலும் குடியிருப்பு பகுதிகளுக்கும் தண்ணீர் புகுந்தது. இந்நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டை பகுதியில் மழை பாதிப்புகளை குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளார். மேலும் சாலையில் நடந்து சென்றே மழை பாதிப்புகளை ஆய்வு செய்ய உள்ளார்.

அதன் பிறகு பேசிய அவர், எதிர்பாராத விதமாக சென்னையில் கனமழை பெய்துள்ளது. தேங்கிய மழை நீர் மின் மோட்டார் மூலம் வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் சென்னையில் மழை நீர் தேங்காத படி அடுத்த மழை காலத்திற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். சென்னையில் 10 ஆண்டுகளாக குட்டிச்சுவராக்கி வைத்துள்ளதால் மழைநீர் தேங்குகிறது. எனவே கடந்த பத்து வருட ஆட்சியில் இருந்தவர்கள் எதுவும் செய்யவில்லை என்று அவர் சுட்டிக் காட்டியுள்ளார். மேலும் அடுத்த பருவ மழைக்குள் மீண்டும் மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |