சிம்ம ராசி அன்பர்களே…!! இன்று முக்கியஸ்தர் ஒருவர் உங்களின் நல்ல குணங்களை பாராட்டக் கூடும். தொழிலில் திட்டமிட்ட பணிகளை நீங்கள் சாமர்த்தியமாக முடிப்பீர்கள். அக்கறையுடனும் நடந்து கொள்வீர்கள். பண பரிவர்த்தனை நல்லபடியாகவே இருக்கும். பெண்கள் கலையம்சம் நிறைந்த பொருட்களை வாங்க கூடும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களின் பேச்சினால் மேல் அதிகாரிகளை கவர்ந்து விடுவீர்கள். அதனால் எதிர்பார்த்த உதவியும் நன்மையும் கிடைக்கப் பெறுவார்கள்.
ஆனால் பொருள்களை மட்டும் கவனமாக வைத்துக் கொள்வது நல்லது. கூடுமானவரை வெளியூர் பயணம் செல்லும் பொழுது ரொம்ப கவனமாக செல்லுங்கள். இன்று கணவன் மனைவியை பொருத்தவரை நல்ல சிறப்பான முன்னேற்றம் இருக்கும். அன்பு இருக்கும். குடும்பத்தில் கூட மகிழ்ச்சி இருக்கும். கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருங்கள். இன்று உறவினர் வகையில் உங்களுக்கு செலவுகள் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாடு மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.