சென்னையில் நேற்று காலையில் 10 மணிநேரத்திற்கும் கூடுதலாக தொடர் கனமழை பெய்தது. இந்த மழை எழும்பூர், புரசைவாக்கம், வேப்பேரி, அடையாறு, பெருங்குடி, சென்ட்ரல், பூந்தமல்லி, தி.நகர், சேத்துப்பட்டு, கோயம்பேடு, வளசரவாக்கம், மீனம்பாக்கம், ஈக்காட்டுத்தாங்கல், சேப்பாக்கம் மற்றும் நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்தது.
இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டில் இன்றும், நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் டெல்டா மாவட்டங்களான கடலூர், விழுப்புரம், புதுச்சேரி, காரைக்காலிலும் 2 நாள் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.