வடகிழக்கு பருவ மழையின் போது தான் தமிழகத்தில் ஆண்டின் அதிக மழைப்பொழிவு இருக்கும். அந்த வகையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை இருக்கும். அதன்படி நவம்பர் மாதத்தில் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் வரலாறு காணாத அளவில் மழை பெய்தது. டிசம்பர் மாதத்தில் மழை சற்று குறைந்து பனிமூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
இதையடுத்து தமிழகத்தில் பல நாட்களுக்கு பிறகு சில இடங்களில் கனமழை அறிக்கையை நேற்று வானிலை மையம் வெளியிட்டது. இந்த நிலையில் சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஒரு சில பகுதிகளில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.