சென்னையில் நேற்று பெய்த கனமழை காலநிலை மாற்றம் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் நேற்று திடீரென கனமழை கொட்டித் தீர்த்தது. இந்த கனமழையால் சென்னையின் பெரும்பாலான பகுதிகள் பாதிப்படைந்தன. சுமாராக ஏழிலிருந்து எட்டு மணிநேரம் வரை பெய்த கனமழையால் சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. எதிர்பாராதவிதமாக பெய்த இந்த கனமழை வானிலை வல்லுனர்கள் கூட கணிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
திடீரென வந்த இந்த பெரும் மழை தலைநகரை ஸ்தம்பிக்க வைத்து விட்டது என்பது மட்டும் நிதர்சனமான உண்மை. இதுவரை எதிர்பார்க்காததை இனி எதிர்பாருங்கள் என் என இயற்கை அன்னை சொல்வது போல இருந்தது இந்த ஆக்ரோஷமாக பெய்த மழை. எனவே காலநிலை மாற்றம் குறித்து முன்கூட்டியே அறிய அதிக அளவில் பணம் செலவழித்து அரசு துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலர் தங்கள் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.