Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மதுபோதையில் இருந்த வாலிபர்…. நண்பரின் வெறிச்செயல்…. சென்னையில் பரபரப்பு…!!

மதுபோதையில் நண்பரை சுத்தியலால் அடித்து கொலை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை மாவட்டத்திலுள்ள வியாசர்பாடி தேபர் நகர் 10-வது தெருவில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சூர்யா என்ற மகன் இருந்துள்ளார். இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இந்நிலையில் ரத்த காயத்துடன் வீட்டில் மயங்கி கிடந்த சூர்யாவை அவரது அண்ணன் விஜயகாந்த் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சூர்யா பரிதாபமாக இறந்துவிட்டார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சம்பவம் நடைபெற்ற அன்று சூர்யா தனது நண்பர்களான முரளிகிருஷ்ணன், தினேஷ் ஆகியோருடன் இணைந்து வீட்டில் வைத்து மது அருந்தியுள்ளார். அப்போது நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் தினேஷ் அங்கிருந்து புறப்பட்டு தனது வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை அடுத்து மதுபோதையில் இருந்த முரளிகிருஷ்ணன் சூர்யாவின் தலையில் சுத்தியலால் அடித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றது தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முரளி கிருஷ்ணனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |