ஜிஎஸ்டி வரி விதிப்பில் ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தால் புத்தாண்டு முதல் ஒரு சில பொருட்களின் விலை உயரும் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதன்படி ஆயத்த ஆடைகள், காலணிகள் மற்றும் போர்வைகள் உள்ளிட்ட ஏராளமான பொருட்களின் மீதான மத்திய நேரடி வரிகள் வாரியம் வரியை உயர்த்தி உள்ளது.
இதனால் சில்லரை வர்த்தகத்தில் ஜனவரி 1 முதல் பொருட்களின் விலை உயரும். இந்நிலையில் ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர் செய்பவர்களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரி அதிகரித்துள்ளது. இந்த ஜிஎஸ்டி வரி அதிகரிப்பால் டெலிவரி செய்யும் தளங்களில் உணவு விலை உயர வாய்ப்புள்ளது.