நெடுந்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் 43 பேர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து அவர்களின் 12 விசைப் படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்ததை தொடர்ந்து தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 43 பேரை வரும் 13ஆம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைப்பதற்கு ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.