Categories
மாநில செய்திகள்

மீனவர்களே…. தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் கன முதல் மிககனமழை பெய்யும். இதனையடுத்து மழை குறையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் தமிழகம், புதுச்சேரியில் இயல்பை விட 59 சதவீதம் அதிக மழை பதிவாகி உள்ளது.

அக்டோபர் 1 முதல் டிசம்பர் 20 வரை இயல்பான மழை அளவான 45 செ.மீ-க்கு பதில் 71 செ.மீ மழை பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டத்தில் 119 சதவீதம் அதிக மழை பெய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் குமரிக்கடல் பகுதிகளுக்கு செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்ல வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

Categories

Tech |