Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘லிப்டில் மாட்டிக்கொண்ட ஆஸி.கிரிக்கெட் வீரர்’ ….! ‘திக் திக் நிமிடங்கள்’ ….!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித் லிப்டில் மாட்டிக்கொண்ட  சம்பவம் பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியது.

ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .இதில் நடந்து முடிந்த 3 டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது .இதில் அடிலெய்டில்  நடந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்  93 ரன்கள் எடுத்தார். இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 4-வது போட்டி வருகின்ற 5-ஆம் தேதி நடைபெற உள்ளது.  ஸ்டீவ் ஸ்மித் வருகின்ற புத்தாண்டைகொண்டாட தன்னுடைய அணி வீரர்கள் மற்றும் குடும்பத்தினருடன் மெல்போர்னில் ஒரு ஹோட்டலில் தங்கி இருந்தார் .அப்போது அவர் அங்குள்ள லிஃப்டை பயன்படுத்தினார் .

ஆனால் எதிர்பாராதவிதமாக லிஃப் பழுதாகி பாதியில் நின்றது .இதனால் ஸ்டீவ் ஸ்மித் லிப்டுக்குள் கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் மாட்டிக்கொண்டார் .இந்நிலையில் ஸ்டீவ் ஸ்மித் லிப்டில் மாட்டிக்கொண்ட சம்பவத்தை ஹோட்டல் ஊழியர்கள் மற்றும் அணி நிர்வாகிகள் பதட்டம் அடைந்தனர். இதனால்  லிஃப்ட்  கதவை திறக்க முயற்சி  எடுக்கப்பட்டது. இந்நிலையில் தான் லிப்டுக்குள் மாட்டிக் கொண்டதை தனது செல்போன் மூலம் ஸ்டீவ் ஸ்மித்  வீடியோ எடுத்து அதனை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார் .சுமார் 55 நிமிட போராட்டத்திற்கு பிறகு லிப்ட் கதவு திறக்கப்பட்டு ஸ்மித் வெளியேறினார் .இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |