முதல்வர் ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் கூட்டுறவு சங்கங்களில் 5 சவரன் நகைகள் தள்ளுபடி செய்யப்படும் என்று தெரிவித்திருந்தார். அவர் ஆட்சிக்கு வந்தவுடன் கொரோனா தடுப்புப் பணிகளை மேற்கொண்டதால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனால் அனைவரின் கடன்களை தள்ளுபடி செய்ய முடியாத நிலை இருந்ததால் நிபந்தனைகளின் அடிப்படையில் தள்ளுபடி செய்ய முடிவு செய்யப்பட்டது. மேலும் கூடுதல் விவரங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த சேகரிப்பின் போது நிறைய நகைகடன் வாங்கியதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று உள்ளது என்பது தெரியவந்தது. இது குறித்து ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தகுதியானவர்கள் மற்றும் நகை கடன் தள்ளுபடி அளிக்கப்படும் என்று கூட்டுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார். அந்த நிபந்தனைகளில் ஒன்றாக 31.3.2021 அன்று வரை நடைபெற்ற 13 லட்சம் பேரின் நகைக்கடன் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் 2022 பொங்கலுக்கு முன்பாக நகைகள் கிடைக்கும் என்று கூட்டுறவு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அரசு ஊழியர்கள் வருமானவரி கட்டுவதால் அவர்களுக்கு நகை கடன் தள்ளுபடி கிடையாது என்று தெரிவித்துள்ளார். மேலும் எந்தவித நிபந்தனையுமின்றி முழுவதுமாக நகை கடன்கள் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று பல தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.