Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐ.பி.எல். ஏலத்தில் இருந்து விலகினார் சாம்பில்லிங்ஸ்..!!!

 சென்னை சூப்பர் கிங்ஸ்காக  விளையாடிய சாம்பில்லிங்ஸ்,I P L ஏலத்தில் இருந்து விலகியுள்ளார்.    

வரும் டிசம்பர் 19-ஆம்தேதி அன்று முதல் முறையாக கொல்கத்தாவில்   I P L -2020 புதிய  சீசனுக்கான ஏலம் நடைபெறவுள்ளது. ஏலத்துக்கு முன்னதாகவே 71 வீரா்கள்  ஒவ்வொரு  அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளன .35 வெளிநாட்டு வீரர்கள்  உள்பட 127 பேரை அணிகள்  தக்க வைத்துள்ளன.I P L ஏலத்தில் மொத்தம் 332 வீரர்கள் கலந்து  கொள்வார்கள்  என்று அறிவிக்கப்பட்டது.

I P L போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கடந்த வருடம் இடம்பெற்ற 5 சிறந்த வீரர்கள்  சமீபத்தில் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.அவர்களில் இங்கிலாந்தின் அதிரடி ஆட்டக்காரரான சாம் பில்லிங்ஸும்  ஒருவர் ஆவார்.இந்நிலையில் I P L ஏலத்தில் இருந்து சாம்பில்லிங்ஸ் விலகியுள்ளார்.மேலும் சில மாதங்களுக்கு எந்த ஒரு T 20 போட்டிகளிலும்  விளையாடமாட்டேன் என்று அவர் முடிவெடுத்துள்ளார்.

தற்போது நடக்க இருக்கின்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான வெள்ளைப் பந்து கிரிக்கெட் ஆட்டங்களுக்கு இங்கிலாந்து அணியில் உள்ள  சாம் பில்லிங்ஸ் இடம்பெறவில்லை.இதனால் தனக்கு வாய்ப்பு கிடைத்த கெண்ட் கவுண்டி  அடுத்த ஒரு வருடம் சிறப்பாக விளையாடி தனது   திறமையை நிரூபிக்க தயாராகவுள்ளார்.

 

Categories

Tech |