மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள கீழ்பாக்கம் பகுதியில் மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் வசித்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களாக மனமுடைந்து காணப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் மாணவி திடீரென 40 தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.