Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் ஜெட் வேகத்தில் பரவும் ஒமைக்ரான்…. மீண்டும் லாக்டவுன்?…. வெளியான அதிர்ச்சித் தகவல்….!!

தென்னாப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் ஒமைக்ரான் என்ற புதிய வைரசாக உருமாறி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இந்த வைரஸ் இந்தியாவிலும் அதிகமாக பரவி வருகிறது. அதாவது மகாராஷ்டிரம், தமிழகம், குஜராத், டெல்லி, ராஜஸ்தான், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, இமாச்சலப் பிரதேசம், கேரளா மற்றும் ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுகுறித்து இன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 16764 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதில் 7585 கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.

மேலும் நேற்று 220 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.தற்போது நாடு முழுவதும் 91,361 பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதனைத் தொடர்ந்து ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை 1270 ஆக அதிகரித்துள்ளது. அதில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 450 பேர், டெல்லியில் 320 பேர், கேராளாவில் 109 பேர், குஜராத் 97 பேர், ராஜஸ்தானில் 69 பேர், தெலுங்கானாவில் 62 பேர், தமிழகத்தில் 46 பேர் மற்றும் கர்நாடகாவில் 34 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்ட 374 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |