இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் சற்று குறைந்து வந்த நிலையில் பல்வேறு மாநிலங்களில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் ஒமைக்ரான் என்ற புதிய வைரஸ் பரவத் தொடங்கி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்களில் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி பல மாநிலங்களில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
இந்நிலையில் உத்தர பிரதேசத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் வருகின்ற ஜனவரி 15ஆம் தேதி வரை குளிர் கால விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு கால அட்டவணை இன்று அல்லது நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இம்மாநிலத்தில் இந்த கல்வியாண்டில் மாணவர்களுக்கு 113 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒமைக்ரான் வைரஸ் பரவி வருவதால் பெற்றோர்கள் இடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் மீண்டும் ஆன்லைன் வகுப்புகள் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர்.