தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழக கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இன்று காலை முதலே சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. அடுத்த மூன்று மணி நேரத்திற்கு சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்நிலையில் தற்போது மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு அலெர்ட் விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.