ஒவ்வொரு வருடத்தின் தொடக்கத்தில் பல முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வருவது வழக்கம். அதன்படி இன்று முதல் பல முக்கிய மாற்றங்கள் நடைமுறைக்கு வருகிறது. அதிலும் குறிப்பாக பிஎஃப் கணக்கு, போஸ்ட் ஆபீஸ் வங்கி கணக்கு, ஜிஎஸ்டி வரியின் 4 முக்கிய மாற்றங்கள் என சாமானிய மக்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கும் பல்வேறு விஷயங்கள் நடைமுறைக்கு வருகின்றது.
ஏடிஎம் பண பரிமாற்ற கட்டணம்:
இன்று முதல் ஏடிஎம் பண பரிமாற்றத்திற்கு 21 ரூபாய் வரி கட்டணம் வசூலிக்கப்படும். இனி ஒவ்வொரு ஏடிஎம் பணம் பரிமாற்றத்திற்கும் கட்டணத்தை ஒரு ரூபாய் அதிகரித்து 21 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இது இலவச ஏடிஎம் பயன்பாட்டை தாண்டி பயன்படுத்தும் ஏடிஎம் பண பரிமாற்றத்திற்கு மட்டுமே 21 ரூபாய் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது.
ஸ்விக்கி, சோமேட்டோ:
ஸ்விக்கி, சோமேட்டோ போன்ற நிறுவனங்கள் இதுவரை உணவகங்களில் இருந்து வசூலித்து வந்த 5 சதவீத வரியை தற்போது வாடிக்கையாளர்களின் மொத்த உணவுக்கான விலையில் இருந்து 5 சதவீத வரியை வசூலிக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது. அதனால் டெலிவரி சார்ஜ், டிப்ஸ் மற்றும் பேக்கேஜிங் சார்ஜ் ஆகியவற்றுக்கு 18% ஜிஎஸ்டி விதிக்க உள்ளது.
ஓலா, உபர்:
ஓலா மற்றும் உபர் போன்ற அனைத்து ஆன்லைன் தளத்தில் புக்கிங் செய்யப்படும் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள் சேவைக்கு இதுநாள் வரையில் எந்தவிதமான வரியும் விதிக்கப்படாத நிலையில் தற்போது மத்திய அரசு 5% ஜிஎஸ்டி விதிக்க முடிவு செய்துள்ளது.
வங்கி லாக்கர் சேவை:
வங்கி லாக்கரில் உள்ள பொருள்கள் திருட்டு அல்லது வங்கி ஊழியர்களின் மோசடி காரணமாக பொருள்களை இழந்தால் அதற்கான பொறுப்பை வங்கி நிர்வாகம் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதற்கு இழப்பீடாக ஓராண்டு வாடகையில் 100 மடங்கு தொகையை வாடிக்கையாளர்களுக்கு வங்கி நிர்வாகம் வழங்க வேண்டும். வங்கி லாக்கரில் இருக்கும் பொருட்களுக்கு இன்சூரன்ஸ் அளிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளது. வங்கி லாக்கர் குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள கட்டுப்பாடுகள் அனைத்தும் இன்று முதல் அமலுக்கு வருகிறது.
ஆடைகள்:
ஜிஎஸ்டி கவுன்சில் அறிவிப்பின் படிஇன்று முதல் ஒரு ஆடையின் விற்பனை விலை 1000 ரூபாய்க்கு குறைவாக இருக்கும் பட்சத்தில் அதற்கு ஜிஎஸ்டி வரி 12 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு அதன் அளவு வெறும் 5% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
காலணிகள்:
மேலும் 1000 ரூபாய்க்கு குறைவான காலணிகள் மீதான ஜிஎஸ்டி வரி 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதனால் ஆடை மற்றும் காலணி வர்த்தகம் நடுத்தர மக்கள் மத்தியில் குறைய வாய்ப்புள்ளது.
இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி:
இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி அறிவிப்பின்படி இன்று முதல் பேசிக் சவிங்ஸ் ஆக்கவுண்ட் – இல் 4 முறை இலவசமாக கேஸ் வித்டிரா செய்து கொள்ளலாம். அதன்பிறகு ஒவ்வொரு முறையும் தத்தம் தொகையில் 0.50% அல்லது குறைந்தபட்ச தொகையாக 25 ரூபாய் ஒவ்வொரு பரிமாற்றத்திற்கும் வசூல் செய்யப்படும். பிற சேமிப்பு மற்றும் நடப்பு கணக்குகளுக்கு ஒவ்வொரு மாதமும் இலவசமாக 25 ஆயிரம் ரூபாய் வரையில் விற்பனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் வரை டெபாசிட் மட்டுமே செய்ய முடியும். குறிப்பிட்ட தொகைக்கு அதிகமாக சென்றாள் 25 ரூபாய் ஒவ்வொரு பரிமாற்றத்திற்கும் வசூல் செய்யப்படும்.
EPFO-நாமினேஷன்:
EPFO அமைப்பு டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் அனைத்து பிஎஃப் கணக்குகளுக்கும் நாமினேஷன் செய்யப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால் அதற்கான கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இ-நாமினேஷன் விரைவில் செய்து முடித்து கொள்வது நல்லது.
கேஸ் சிலிண்டர் விலை:
ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. எனவே இந்த மாதத்தில் கேஸ் சிலிண்டர் விலையில் பெரிய மாற்றத்தை எதிர்பார்க்கலாம்.
ஐசிஐசிஐ வங்கி:
தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கி சேமிப்பு கட்டணங்களுக்கான சேவை கட்டணத்தை இன்று முதல் மாற்றியுள்ளது.