Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

பல்வேறு கோரிக்கைகள்…. பயணிகள் சங்கத்தினர் மனு…. ரயில்வே மேலாளர் ஆய்வு….!!

ரயில் நிலையத்தை ரயில்வே மேலாளர் கணேஷ் திடீரென ஆய்வு செய்துள்ளார்.

அரக்கோணம் ரயில் நிலையத்தில் ரயில்வே மேலாளர் கணேஷ் ஆய்வு செய்துள்ளார். அப்போது நடைமேடை மற்றும் நடைமேடை மேம்பாலம் அருகே இருக்கும் லிப்ட், காவல் நிலைய கட்டிடம், ரயில் ஓட்டுனர்கள், சிக்னல் அறை, ரயில் கட்டுப்பாட்டு அறை, பயணிகள் மற்றும் கார்டுகள் ஓய்வறைகள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். இதனையடுத்து ரயில்வே போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகம், டிக்கெட் பரிசோதகர் அலுவலகம், ரயில் நிலையம் அருகே நடைபெற்று வருகின்ற வளர்ச்சிப் பணிகள் மற்றும் சுகாதார அலுவலகத்தையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார்.

பின்னர் இரண்டாவது நடைமேடையில் இருக்கும் ரயில்வே நிலைய கட்டிடம் இடிந்து விழும் நிலையில் இருப்பதையும் மற்றும் மழை நாட்களில் கட்டிடத்தின் உட்புறம் முழுவதும் மழைநீர் வருவதையும் ரயில்வே காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஆதலால் இதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து ரயில் நிலைய சுவர்களில் சுவரொட்டிகள் ஓட்டுவதற்கும், ரயில் நிலையத்தை சுகாதாரமாக வைத்திருக்குமாறும், ரயில் நிலைய வளாகத்தை சுற்றி விளம்பரப் பலகைகள் வைப்பதற்கும் அனுமதிக்கக்கூடாது என ரயில்வே அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார். மேலும் ரயில் பயணிகள் சங்கத்தினர் ரயில் பயணிகளுக்கான பல கோரிக்கைகளை வலியுறுத்தி அவரிடம் மனு அளித்துள்ளனர்.

Categories

Tech |