Categories
மாநில செய்திகள்

“தமிழக மீனவர்கள் மீது கிருமி நாசினி தெளிப்பதா”….?  மதுரை ஐகோர்ட்டு கண்டனம்…..!!!

தமிழக மீனவர்கள் மீது இலங்கை ராணுவம் கிருமிநாசினி அளித்ததற்கு மதுரை ஐகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி சமீபத்தில் 68 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யும் வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரலானது. இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மதுரை ஹைகோர்ட் தமிழக மீனவர்கள் மீது கிருமிநாசினி தெளிப்பது மனிதாபிமானம் இல்லாத செயல். கைது செய்த மீனவர்களை தனிமைப்படுத்தி அதன் பின்னர் கொரோனா பரிசோதனை செய்து இருக்கலாம்.

கைது செய்த மீனவர்களை கண்ணியத்துடனும் மனிதாபிமானத்துடனும் இலங்கை அரசு நடத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் பொங்கலுக்கு முன்பாக தமிழக மீனவர்களை மத்திய அரசு விரைவில் அழைத்து வரும் என்று இந்த கோர்ட்டு நம்புகிறது என தெரிவித்துள்ளது.

Categories

Tech |