தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் ரூபா குருநாத் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் புதிய தலைவராக என். சீனிவாசனின் மகள் ரூபா குருநாத் கடந்த 2019-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பொறுப்பேற்றார் .இந்நிலையில் போட்டியின்றி தேர்வான ரூபா குருநாத் பிசிசிஐ மற்றும் மாநில கிரிக்கெட் சங்கங்களின் முதல் பெண் தலைவர் என்ற பெருமையைப் பெற்றார். இந்நிலையில் வியாபாரம் மற்றும் தனிப்பட்ட விஷயங்களில் கவனம் செலுத்துவதற்காக இவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இதில் சீனிவாசனின் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் முழுநேர இயக்குனராக அவர் பணிபுரிந்து வருகிறார் .இதனால் ரூபா குருநாத் மீது இரட்டை ஆதாயக் குற்றச்சாட்டு எழுந்தது. அதேசமயம் இவர் தலைவராக இருந்த காலகட்டத்தில் தமிழ்நாடு அணி அடுத்தடுத்த வருடங்களில் சையது முஷ்டாக் அலி கோப்பையை வென்றது .அதேபோல் இந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டி மற்றும் ஐபிஎல் தொடரில் சில போட்டிகள் சென்னையில் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது