தமிழக கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை பெய்து வருகின்றது. தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை இருக்கும் என்பதால் இந்திய வானிலை ஆய்வு மையம் இன்றும் நாளையும் தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதி கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அந்த மாவட்டத்திற்கு மட்டும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து சென்னை, கடலூர், வேலூர், திருவள்ளூர், உள்ளிட்ட 18 மாவட்டங்க்ளுக்கு மஞ்சள் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.