Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

பக்கவாத நோயால் பாதிப்பு…. முதியவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள செட்டிபுலம் கிராமத்தில் ராஜகோபால் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த முதியவர் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த ராஜகோபால் திடீரென விஷம் அருந்தி விட்டார்.

அதன்பின் அக்கம்பக்கத்தினர் ராஜகோபாலை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி இராஜகோபால் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |