இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், கைகளை கழுவுதல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளும் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிரதமரை முகக்கவசம் அணிய வில்லை அதனால் நானும் முகக்கவசம் போடவில்லை என்று சிவ சேனா எம்.பி. சஞ்சய் ராவத் சுட்டிக்காட்டியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சஞ்சய் ராவாத் கலந்து கொண்டார்.
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், எல்லாரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஆனால் அவரை மாஸ்க் போடுவதில்லை. ஆனால் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே மாஸ்க் அணிகிறார். நான் மோடி நாட்டின் தலைவர் பிரதமரை பின் தொடருகிறேன். எனவே நான் மாஸ்க் அணிவதில்லை என்றும் மக்களும் மாஸ்க் அணிய அவசியம் இல்லை. மேலும் சுப்ரியா சூலே, சதானந்த் சூலே, பிரஜக்த் தன்புரே மற்றும் வர்ஷா கெய்க்வாட் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது எல்லோரும் கவனமாக இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.