டீக்கடையில் பற்றி எரிந்த நெருப்பை தீயணைப்புத் துறையினர் அணைத்தனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வாழ்மங்கலம் மேலத்தெருவில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் தனக்கு சொந்தமான டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் இவரது கடையில் திடீரென நெருப்பு பற்றி எரிந்தது. இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று நெருப்பை அணைக்க முயன்றனர்.
ஆனால் பலத்த காற்று வீசியதால் கடை முழுவதும் நெருப்பு பற்றி அனைத்து பொருட்களும் சேதமடைந்தன. இதுபற்றி தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நெருப்பு பரவாமல் அணைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிந்த திட்டச்சேரி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.