கடந்த டிசம்பர் 29 ஆம் தேதியன்று “ஸ்டேண்ட் நியூஸ்” என்ற இணைய பத்திரிக்கை நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையின் முடிவில் கைது செய்யப்பட்ட 7 பேரை உடனே விடுதலை செய்யுங்கள் என்று சீனாவிற்கு அமெரிக்கா தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளது.
சீனாவின் கட்டுப்பாட்டிலுள்ள ஹாங்காங்கின் ஜன நாயகத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக “ஸ்டேண்ட் நியூஸ்” என்னும் இணைய பத்திரிக்கை செய்திகளை வெளியிட்டு வந்துள்ளது. ஆனால் ஹாங்காங் நிர்வாகம் “ஸ்டேண்ட் நியூஸ்” தேச விரோத செயல்களில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளது.
அதோடு மட்டுமின்றி கடந்த டிசம்பர் 29 ஆம் தேதியன்று ஹாங்காங் காவல்துறை அதிகாரிகள் “ஸ்டேண்ட் நியூஸ்” என்னும் இணையதள பத்திரிகை நிறுவனத்தில் அதிரடியாக சோதனையில் இறங்கியுள்ளது. அந்த சோதனையின் முடிவில் ஸ்டேண்ட் நியூஸ் பத்திரிகை நிறுவனத்தின் 7 மூத்த பணியாளர்களை காவல் அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்கள்.
இந்நிலையில் சீனா கைது செய்த ஸ்டேண்ட் நியூஸ் பத்திரிகை நிறுவனத்தின் 7 மூத்த பணியாளர்களை உடனே விடுதலை செய்யுங்கள் என்று அமெரிக்கா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. மேலும் இதுகுறித்து அமெரிக்க நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரியான ஆண்டனி கூறியதாவது, நம்பிக்கையுள்ள ஒரு அரசாங்கம் சுதந்திரமான ஊடகத்தை கண்டு பயப்படாது என்று தெரிவித்துள்ளார்.