தமிழகத்தில் கடந்த ஒன்றரை வருடமாக கொரோனா அச்சுறுத்தி வந்த நிலையில் தற்போது உருமாறிய புது வைரஸ் ஒமைக்ரான் தலைகாட்டி உள்ளது. இதனால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதற்கிடையில் சென்னையில் கடந்த 10 நாட்களாக கொரோனா தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சில மாதங்களாக குறைந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது.
கடந்த சில நாட்களில் மட்டும் 294 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகள் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று சென்னை சைதாப்பேட்டையில் நீட் பயிற்சி மையத்தில் பயின்ற 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.