‘வலிமை’ படத்தின் ரிலீஸ் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்கள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இயக்குனர் வினோத் இயக்கத்தில் இவர் நடித்துள்ள திரைப்படம் ”வலிமை”. போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதனையடுத்து, இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது.
சமீபத்தில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் விசில் தீம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த படத்தின் கர்நாடகா ரிலீஸ் உரிமையை கமர் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
We are happy to announce our association with Kamar Film Factory for the release of #Valimai in Karnataka.#AjithKumar #HVinoth @thisisysr @BayViewProjOffl pic.twitter.com/L9UTWtlQrH
— Boney Kapoor (@BoneyKapoor) December 31, 2021