ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் பூஸ்டர் தடுப்பூசி ஒமிக்ரான் பாதித்து மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது 85% குறைந்திருப்பதாக தென் ஆப்பிரிக்க நாட்டின் ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.
தென் ஆப்பிரிக்காவின் மருத்துவ ஆய்வு மையமானது, 2 டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்ட 69 ஆயிரம் சுகாதார ஊழியர்களை, தடுப்பூசி எடுத்துக் கொள்ளாத நபர்களுடன் ஒப்பீட்டு ஆராய்ச்சி செய்தது. ஆய்வு செய்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளதாவது, ஆப்பிரிக்கா இந்த தடுப்பூசியை நம்பியிருக்கிறது.
எனவே இந்த தகவல் முக்கியமாக கருதப்படுகிறது. மேலும் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் விஞ்ஞானியான மத்தாய் மாமன், என்பவர் குறிப்பதாவது, ஒமிக்ரான் தொற்றை எதிர்த்து தடுப்பூசி பலமாகவும் நிலையாகவும் மாறியிருக்கிறது என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் ஏறத்தாழ 5 லட்சம் சுகாதார ஊழியர்களுக்கு ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி அளிக்கப்பட்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளார். இதில், மருத்துவமனைகளில், கொரோனா பாதிப்பால் மக்கள் அனுமதிக்கப்படுவது, 85% குறைந்திருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.