‘வலிமை’ படத்தின் அசத்தலான ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்கள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இயக்குனர் வினோத் இயக்கத்தில் இவர் நடித்துள்ள திரைப்படம் ”வலிமை”. போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதனையடுத்து, இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது.
சமீபத்தில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் விசில் தீம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த படத்தின் அசத்தலான ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 13 ம் தேதி ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனை சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
Get ready for the most awaited action thriller of 2022, releasing on 13th Jan 2022.#Valimai censored U/A.#ValimaiPongal.#ValimaiTrailer : https://t.co/oDIbnspfVD pic.twitter.com/638jdOqke9
— Zee Studios (@ZeeStudios_) December 31, 2021