Categories
மாநில செய்திகள்

BREAKING : 9-12ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்கும்…. தமிழக அரசு அதிரடி….!!!

9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் கல்லூரிகள் தொடர்ந்து செயல்படும் என்று தமிழக அரசு அதிரடியாக தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்று தற்போது பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனால் தொடர்ந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். தற்போது  உருமாற்றம் கண்டு OMICRON உலக நாடுகள் முழுவதும் பரவி வருகின்றது. இந்தியா முழுவதும் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியது.

தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு இன்றுடன் முடிவடைய இருப்பதால் முதல்வர் இன்று சுகாதாரத்துறை வல்லுனர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து தற்போது தமிழகத்தில் மீண்டும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்கள் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி செயல்படும். ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளுக்கு ஜனவரி 10ஆம் தேதி வரை அனுமதி இல்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |