Categories
அரசியல்

அண்ணே வாங்க…. அக்கா வாங்க…. நகை கடன் வாங்குங்க…. “இதெல்லாமே நம்பிக்கை துரோகம்”….. அண்ணாமலை விளாசல்….!!!!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலின் போது திமுக வெளியிட்ட அறிக்கையில் 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்தன. இதுவரை 300க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட உள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து திமுக தேர்தல் அறிக்கையில் கூட்டுறவு சங்க நகை கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பு எப்போது நிறைவேற்றப்பட வேண்டும் என்று திமுக மற்றும் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வந்தனர். இந்நிலையில் கூட்டுறவு வங்கிகளில் வைக்கப்பட்டுள்ள நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் ஆனால் அதற்கு முன்னதாக இதில் நடைபெற்றுள்ள பல்வேறு முறைகேடுகள் களையப்படும் என்று முதல்வர் அதிரடியாக அறிவித்திருந்தார்.

இதற்கிடையில் கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களிடம் கூறியது, கூட்டுறவு வங்கிகளில் மொத்தம் 42 லட்சத்து நகைகடன் வைத்துள்ளனர். இதில் பல்வேறு நபர்கள் முறைகேடாக நகை கடன் வைத்துள்ளதால் அவர்களின் ஆவணங்களை ஆய்வு செய்து தற்போது 10,18,000 நபர்களுக்கு மட்டுமே 5 பவுன் நகை கடன் தள்ளுபடி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூட்டுறவு சங்கங்களில் அரசு ஊழியர்களுக்கு நகை கடன் தள்ளுபடி வழங்கப்படாது. பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் 5 பவுன் நகைக்கும் மேல் ஒரு கிராம் அதிகமாக வைத்திருந்தாலும் கடன் தள்ளுபடி வழங்கப்படாது என்று அறிவித்திருந்தார். இந்நிலையில் கூட்டுறவு நகை கடன் தள்ளுபடி விஷயத்தில் திமுக அரசு மற்றும் உதயநிதி ஸ்டாலினையும் தமிழக பாஜக தலைவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட நகை கடன்கள் அனைத்தும் முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படும் என்று தேர்தலின் போது மக்களின் ஆசையை தூண்டி, திமுக அரசு தற்போது வெளிப்படையாக நம்பிக்கை மோசடி செய்துள்ளது. அதனைத் தொடர்ந்து அண்ணே வாங்க, அக்கா வாங்க, உடனே கூட்டுறவு வங்கி நகை கடன் வாங்குங்க நாளைக்கு நம்ம ஆட்சி வந்த உடனே மொத்த கடனும் ரத்து என்று தேர்தல் பிரச்சாரத்தின்போது முழங்கிய உதயநிதி ஸ்டாலின் மக்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்து உள்ளார். மேலும் மக்களுக்கு ஆசை காட்டி மோசம் செய்த திமுகவின் வெற்றி பெற்றதால் இனி அவர்களுக்கு தள்ளுபடி பற்றி எந்த ஒரு அக்கறையும் இல்லை. அதாவது நகைக்கடன் தள்ளுபடி ஆகவில்லை அந்தத் திட்டம் தான் தள்ளுபடி ஆகிவிட்டது என்று அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

Categories

Tech |