சென்னையில் இரண்டாவது நாளாக இன்றும் கனமழை நீடித்து வருகிறது. இதனால் சென்னை நகரம் முழுவதும் நீரில் தத்தளித்து வருகிறது. சாலையில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்த நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரண்டு மணி நேரத்துக்கு கனமழை வெளுத்து வாங்கும் என்று சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் கன மழை பெய்யும். எனவே கனமழை பெய்யும் பொழுது செல்போன், டிவி போன்ற பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.