Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SA ஒருநாள் தொடர் : இந்திய அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் நியமனம் …! பிசிசிஐ அறிவிப்பு ….!!!

தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியின் கேப்டனாக கே.ல்.ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது .இதில் இரு அணிகளுக்கு இடையே நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் டெஸ்ட் தொடர் முடிந்த பிறகு இரு அணிகளுக்கு இடையிலான3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறுகிறது.

இத்தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டார் .ஆனால் காயம் காரணமாக அவர் ஒருநாள் தொடரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவருக்கு பதிலாக இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக கே.ல்.ராகுலும், துணை கேப்டனாக பும்ராவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

Categories

Tech |