குப்பையில் வைக்கப்படும் தீயால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதால் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பொது இடங்களில் அதிகளவில் குப்பை கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதிகளில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் மர்மநபர்கள் குப்பை மற்றும் கழிவுகளை அடிக்கடி தீ பற்ற வைத்து செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகேயும் மர்மநபர்கள் குப்பையில் தீயை பற்ற வைத்து செல்கின்றனர்.
இதனால் மாணவர்கள் மற்றும் அப்பகுதி வழியாக செல்லும் பொதுமக்கள் ஆகியோருக்கு மூச்சுத்திணறல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே குப்பைக்கு தீ வைப்பதை நிறுத்தவும், ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் பொது இடங்களில் குப்பை கொட்டுவதை நிறுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.