இஸ்ரேலில் கண்டறியப்பட்ட ‘ப்ளோரனா’ என்ற புதிய வகை வைரசால் மரணம் ஏற்படும் அபாயம் உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
புதிய வகை கொரோனா வைரஸ் ஒன்று இஸ்ரேலில் கண்டறியப்பட்டுள்ளது. அந்த புதிய வகை வைரசுக்கு ‘ப்ளோரனா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. அதாவது ப்ளூவென்சா தொற்று மற்றும் கொரோனா வைரஸ் ஆகிய இரண்டும் இணைந்து ‘ப்ளரோனா’ என்ற பெயரில் புதிய வைரசாக உருவெடுத்துள்ளது.
இன்ப்ளுவன்சா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தசைவலி, இருமல், சளி, காய்ச்சல், மூக்கு ஒழுகுதல், உடல் சோர்வு, நெரிசல், இருமல் போன்ற அறிகுறிகள் தென்படும். எனவே இந்த இன்ப்ளுவன்சா வைரஸ் கொரோனாவுடன் இணைந்து கூடுதல் ஆபத்தை விளைவிக்கும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
அதேசமயம் மரணத்தை ஏற்படுத்தும் அபாயமும் உள்ளதாக கூறியுள்ளனர். மேலும் விஞ்ஞானிகள் இந்த புதிய ‘ப்ளோரனா’ வைரஸ் பற்றி தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.