Categories
மாநில செய்திகள்

ஹேப்பி நியூஸ்…! இன்று முதல் பத்திரப்பதிவில்…. வயதானவர்களுக்கு சலுகை அமல்….!!!!

தமிழகத்தில் பத்திர பதிவிற்கு வரும் மூத்த குடிமக்களுக்கு ஜனவரி 1ஆம் தேதி இன்று முதல் முன்னுரிமை அளிக்கும் புதிய நடைமுறை அமலுக்கு வரும் என்று பத்திரப்பதிவு துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஆன்லைன் முறையில் பத்திரப்பதிவு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக டோக்கன் வழங்கப்பட்டு வரிசைப்படி பத்திரப்பதிவு நடக்கிறது. இதில் முந்தைய நபர்களின் பதிவு முடியும் வரை வயதானவர்கள் காத்திருக்க வேண்டிய உள்ளது. எனவே அவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

இதனை கவனத்தில் கொண்டு வயதானவர்களின் சிரமத்தை குறைக்கும் விதமாக தமிழக அரசு, டோக்கன் வரிசைமுறை தொடர்ந்து கடைபிடிக்கப்படும் என்றும், அதேநேரத்தில் விற்பது வாங்குவது என்று யாராவது ஒருவர் 70 வயதைக் கடந்தவர் என்றால் டோக்கன் எதுவானாலும் உடனடியாக பதிவுக்கு அனுமதிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. ஆதார் அடையாள ஆவணங்களை வைத்து வயதை பூர்த்தி செய்துவிட்டு மூத்த குடிமக்களுக்கு பத்திரப்பதிவுக்கு உடனடியாக அனுமதிக்க வேண்டும். இந்த புதிய நடைமுறை ஜனவரி 1 இன்று முதல் அமலுக்கு வரும் என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |