இந்திய டெஸ்ட் அணியில் ஓரங்கட்டப்பட்டதற்கான காரணம் இன்று வரை தெரியவில்லை என ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் 1998ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் அவர் அனைத்து வடிவிலான போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் . இதில் குறிப்பாக 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளவர் 417 விக்கெட் கைப்பற்றி உள்ளார் .இதைப்போல் 237 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 269 விக்கெட்டும், 28 டி20 போட்டிகளில் விளையாடி 25 விக்கெட் கைப்பற்றி உள்ளார் .இவர் கடைசியாக கடந்த 2016 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக விளையாடினார் .இதில் டெஸ்ட் கிரிக்கெட் கடைசியாக கடந்த 2015 ஆம் ஆண்டு விளையாடினார் .
ஆனால் அதன்பிறகு அவருக்கு டெஸ்ட் அணியில் இடம் கிடைக்கவில்லை.இந்நிலையில் டெஸ்ட் அணியில் இருந்து தான் ஓரங்கட்டப்பட்டு குறித்து அவர் கூறுகையில்,” என்னுடைய 31 வயதில் நான் 400 விக்கெட் என்ற புதிய மைல்கல்லை எட்டினேன். 31 வயதில் 400 விக்கெட் கைப்பற்றிய என்னால் அடுத்த 8-9 ஆண்டுகளில் குறைந்தது 100 விக்கெட்டுகளை கூடுதலாக கைப்பற்றி இருக்க முடியும் .ஆனால் அதன் பிறகு என்னை அணியில் எடுக்கவில்லை .அதே சமயம் 400 விக்கெட் கைப்பற்றிய வீரர் ஒருவர் அணியில் புறக்கணிக்க படுவதற்கான காரணம் மர்மமாகவே இருப்பது ஆச்சரியம் .இன்று வரை என்னை அணியின் ஏன் ஓரம் கட்டினார்கள் என எனக்கு தெரியவில்லை. இதற்கு பின்னணியில் இருந்தது யார் என்ற கேள்விக்கு பதில் தெரியவில்லை . நானும் அப்போது கேப்டனாக இருந்த தோனியிடம் கேட்டு தெரிந்து கொள்ள முயற்சித்தேன் .ஆனால் எனக்கு அவர் தெரியப்படுத்தவே இல்லை. இதனால் இதை அப்படியே விட்டு விட்டேன் ” இவ்வாறு அவர் கூறினார்