Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கோரிக்கையை வலியுறுத்தி…. ஊராட்சி தலைவரை சிறை பிடித்த பொதுமக்கள்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!

பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டபடததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள எஸ்.வாழவந்தியில் அரசு உயர்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. நடுநிலை பள்ளியாக செயல்பட்டு வந்த இந்த பள்ளி கடந்த 2018 ஆம் ஆண்டு உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் இன்னும் கட்டப்படாமல் இருப்பதால் மாணவர்களுக்கு போதிய வகுப்பறைகள் இல்லாமல் வகுப்பறை இல்லாமல் மரத்தடியிலும் அங்குள்ள கலையரங்கத்திலும் வைத்து வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இது குறித்து மாணவர்களின் பெற்றோர் ஏற்கனவே ஊராட்சி மன்ற தலைவரிடம் கூடுதல் வகுப்பறை கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மனு அளித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட்  மாதம் பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பள்ளியின் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டு கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இருப்பினும் இதுவரையிலும் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இதுகுறித்து எவ்வித தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று எஸ்.வாழவந்தி ஊராட்சி மன்றத்தை முற்றுகையிட்டு தலைவர் திமுகவை சேர்ந்த குப்புசாமியை உள்ளே வைத்து பூட்டியுள்ளனர்.

இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வட்டார வளர்ச்சி அலுவலர் முனியப்பன், மற்றும் காவல்துறையினர் ஊராட்சி மன்ற தலைவரை விடுவித்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். மேலும் அரசு உயர்நிலை பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்காக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்த பின்னரே பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |