Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

மெட்ரோவில் பாய்ந்த கணவன்… குழந்தையை கொன்ற மனைவி… டெல்லியில் சோகம்..!!

டெல்லியில்  தமிழகத்தை சேர்ந்த நபர் மெட்ரோ ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட நிலையில் குழந்தையை கொன்ற அவரது மனைவி தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார் .

சென்னையை அடுத்து நொலம்பூர் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர், டெல்லியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பொது மேலாளராக பணிபுரிந்து வந்தார் .குழந்தை ,மனைவி மற்றும் தம்பியுடன் நொய்டாவில் அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து  வந்த அவர் டெல்லி ஜவகர்லால் நேரு  மெட்ரோ ரயில் நிலையத்தில் ஓடும் ரயில் முன் குதித்து  தற்கொலை செய்து கொண்டார் .

இதையடுத்து அவர் உடல் வைக்கப்பட்டிருந்த டெல்லி ராம் மனோகர் லோகியா மருத்துவமனைக்கு வந்த அவரது மனைவி வீட்டிற்கு வந்து தானும் தற்கொலை செய்து கொண்டார் .முன்னதாக தங்களது 5வயது மகளையும் தூக்கிலிட்டு கொலை  செய்தார். இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ள டெல்லி போலீசார் பொருளாதாரம் நெருக்கடி  இருந்ததால் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரிவித்துள்ளனர் .

Categories

Tech |