ஜம்மு-காஷ்மீரின் கத்ராவில் உள்ள புகழ்பெற்ற வைஷ்ணவி தேவி கோவிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புத்தாண்டையொட்டி வழிபட கோவிலில் ஏராளமான பக்தர்கள் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதனால் நெரிசலில் சிக்கி டெல்லி, ஹரியானா, ஜம்மு காஷ்மீர், பஞ்சாப்பை சேர்ந்த பக்தர்கள் உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த 14 பக்தர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மேலும் நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.