விருதுநகரில் ஆவின் மட்டும் அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடிரூபாய் மோசடி செய்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமறைவாகியுள்ளார். தனிப்படை மூலம் போலீசார் அவரை தேடி வருகின்றனர். இந்நிலையில் அவர் குறித்து,அவருடன் தொடர்பில் இருந்த முன்னாள் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன் மற்றும் ராஜேந்திர பாலாஜியின் நேரடி உதவியாளர் சீனிவாசன் ஆகியோரிடம் குற்ற பிரிவு அலுவலகத்தில் மதுரை சரக டிஐஜி மற்றும் எஸ்பி தலைமையில் விசாரணை நடைபெற்றது.
இதற்கு முன்னதாக கடந்த 18ஆம் தேதி அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில் தற்போது இரண்டாவது முறையாக ராஜவர்மணிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் விசாரணை முடிந்து வெளியே வந்த ராஜவர்மன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், வரவேண்டிய நேரத்தில் ராஜேந்திர பாலாஜி வருவார். ஓடி ஒளியும் அளவிற்கு அவர் ஒன்றும் கொலை குற்றம் செய்யவில்லை. நீதிமன்றம் மூலம் தான் நிரபராதி என்பதை நிரூபிப்பார் என்று அவர் கூறியுள்ளார்..