Categories
தேனி மாவட்ட செய்திகள்

7 அடி நீள மலைபாம்பா…. அதிர்ஷ்டவசமாக தப்பிய தொழிலாளி…. தீயணைப்பு துறையினர் அதிரடி….!!

தோட்டத்தில் புகுந்த சுமார் 7 அடி மலைப்பாம்பை தீயணைப்பு துறையினர் பிடித்து வனப்பகுதிக்குள் விட்டுள்ளனர்.

தேனி மாவட்டம் போடி குரங்கணி பகுதியில் பழனிவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான தோட்டத்தில் வேலை பார்த்து கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு மலைப்பாம்பு ஒன்று அவரது கால் அருகே ஊர்ந்து கொண்டிருந்துள்ளது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பழனிவேல் உடனடியாக தோட்டத்தை விட்டு வெளியேறி போடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் சுமார் 1 மணி நேரம் போராடி தோட்டத்திற்குள் புகுந்த 7 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்துள்ளனர். இதற்கு பிறகு அதனை பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் கொண்டு போய் விட்டுள்ளனர்.

Categories

Tech |